Tuesday, 26 September 2017

“NO WORLD WITHOUT CIVIL ENGINEER”
"வீடு, நீர் இன்றி அமையாது ஒலகு"
கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்ப்படுதிகொண்டிருக்கிற PSN பொறியியல் கல்லுரியில் சமூக பொறியியல்துறை ( CIVIL ENGINEERING DEPARTMENT) மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகும்
"கேடு இல விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடு அல்ல மற்றை யவை" ----- குறள்- 400
கல்வி வேலை வாய்ப்புகளை அள்ளி கொடுக்கும் தன்மை உடையதாக இருக்கவேண்டும்.
மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் அதிபர்களாகி நாட்டின்
வளர்ச்சியில் முக்கிய பங்காற்றவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்
அமைக்கப்பட்ட கல்லூரிதான் PSN பொறியியல் கல்லூரிகள்  இந்த கல்லூரி
பாளையம்கோட்டை - சேரன்மஹாதேவி ரோட்டில் இயற்கை எழில் சூழ்ந்த
மேலத்தடியூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இக்கல்லூரிகளின் கீழ் செயல் செயல்படும் Lord jagannath college of Engineering & technology, Lord Jagannath polytechnic College. And Lord Jagannath College of Education  மத்திய மாநில அரசுகளின்அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரிஇயற்கை எழில் சூழ்ந்த மலையடிவாரத்தில் தோவாளை சானெல் மேற்கு பக்கத்தில் பி . எஸ் . என் நகர், ராமநாதிச்சன்புதூர் கிராமத்தில் கிராமத்தில் அமைந்துள்ளது  கட்டிட பொறியியல் பிரிவில் தமிழ் நாட்டிலேயே முதல் இடம் பிடிக்க உள்ளது . வெளி இடங்கள் மற்றும் உள்நாடுகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் கல்விகற்க வாய்ப்பாக நல்ல சுகாதாரமான காற்றோட்ட வசதியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும்  நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது.மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும்  தனித்தனியாக விடுதி வசதி உள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் மாணவ -மாணவிகள் கல்லூரிக்கு சென்றுவர வாய்ப்பாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவ - மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாகவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இக்கல்லூரியின் தாளாளர் Dr. SUYAMBU ( PSN Group of Institutions, founder and Managing trustee ) விளங்குகிறார் சிவில் துறை மாணவர்கள் தங்கள் துறையில் பிரகாசிக்க செய்ய வேண்டியவை !
* செயல் முறை அறிவு மேன்படுத்திகொள்ளவேண்டும் .
* கட்டடங்கள் விழாமல் தடுக்க பல விதிமுறைகளை தெரிந்துகொள்ளவேண்டும் .
* மாணவர்கள் works site க்கு சென்று, கட்டடங்கள் கட்டுவது எப்படி என்று தங்கள்
சொந்த முயற்சியில் தெரிந்துகொள்ளவேண்டும், Semister விடுமுறைகளில் ஏதோ ஒரு கட்டிடத்திற்கு சென்று அங்கே நடக்கும் வேலைகளை தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும்.
* பாடமுறைகளுக்கும் , field work கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துக்கொண்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல் மற்றும் மணல் குவாரிகள் இருக்கும் இடங்கள், கட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தற்போதைய விலை பட்டியல், பலதரப்பட்ட தொழில்கள் செய்யும் தொழிலாளிகளின் ஊதியம் பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
* நம்நாடு அல்லாமல் மற்ற நாடுகளில் உள்ள புதிய தொழில்நுடங்களை பற்றி
தெரிந்துகொண்டு நம்நாட்டிலும் நடைமுரைப்படுதவேண்டும்
* இயற்கை பேரழிவான சுனாமி மற்றும் பூகம்பம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டடங்களை வடிவமைக்க தெரிந்திருக்கவேண்டும் .
* Soft Computing Technique - ககை பயன்படுத்தி கட்டடங்கள் வடிவமைக்க
தெரிந்திருக்கவேண்டும் .அதனால் கட்டடங்களில் பொருட்களின் உபயோகங்கள் குறைவதுடன் நேரம் மற்றும் வேலையட்கைளின் தேவை குறையும் .
* மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் நேரத்தில் அளவு மாற்றும் முறையை (Unit Conversion ) கற்றுக்கொள்ளவேண்டும் . ஏனெனில் கலூரி படிப்பை முடித்து Site work க்கு செல்லும்போது இது மிகமிக அவசியமாகிறது .
* மாணவர்கள் படிக்கும் காலத்தில் எந்த மாதிரியான வேலை ( அல்லது )
மேட்கல்வி படிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் .
* மாணவர்கள் படிக்கும் பாடங்களில் கட்டடங்கள் கட்டும் விதிமுறைகள்
தெரிந்து கொள்ளவேடும்
* வாஸ்து முறையில் கட்டடங்கள் கட்ட தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
* மாணவர்கள் படிக்கும் காலங்களில் டிசைன் சாப்ட்வேர் மற்றும் வரைபடம்
வரைவதற்கு (Auto cad, ARICI CAD ) போன்றவற்றை தெரிந்துகொண்டு இருந்தால்
தனியார் துறையிலும் அரசு துறையிலும் முன்னுரிமை தரப்படுகிறது.
* நூலகத்திற்கு சென்று தினசரி நாளிதழ்கள், கட்டுமான துறை நாளிதழ்களை
படித்து நவீன தொழில்நூட்பங்களை தெரிந்துகொள்ளவேண்டும்.
* அவர்கள் சொந்த முயற்சியில் சிறிய புராஜெக்ட்களை ஒரு செமிஷ்டருக்கு
ஓன்று வீதம் செய்ய வேண்டும்.
* இணையதளத்தில் சிவில் சம்மந்தமான தளத்திற்கு சென்று புதிய
பரோஜெக்ட்களை பற்றியும், வேலை வாய்ப்புகளை பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் .
* சிவில் துறையில் முன்னோடியாக திகழும் வல்லுனர்களை பற்றியும் அவர்களது
நடைமுறை அனுபவத்தை பற்றியும் அறிந்துகொள்ளவேண்டும்.
* அரசு துறை தேர்வு TNPSC, CPWD, Railway Service commission, Rites Indid Limited,Highways, UPSC, Staff selection commission, IAS, IES, IRS, ஆகிய
தேர்வுகளுக்கு அல்லது gate examination ஆகியவைகளுக்கு தங்களை
தயார்ப்டுதிகொள்ளவேண்டும். ஆக மொத்தத்தில் மாணவர்கள் சிவில் துறையில் சேர்ந்த நாள் முதல் தங்களை civil engineer களாக பாவித்துகொண்டு
அதற்கேற்ப தங்களை தயார் படுதிகொள்ளவேண்டும் . ஒரு நல்ல CIVIL ENGINEER ராக தங்களை உருவகப்படுத்தி கனவு காணவேண்டும். கனவு மெய்ப்டவேண்டும். சிவில் துறையில் புகுத்தப்பட வேண்டிய புதிய தொழில்நுட்பங்கள்!
* மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் நான்கு ஆண்டு முடித்த உடன் கடைசி ஓராண்டு ஹவுஸ் சர்ஜன் சைவது போல அமைப்பியல் பொறியியல் மாணவர்கள் நான்கு ஆண்டு படிப்புடன் ஆறு மாதங்களாவது கட்டுமான துறையில் பயிற்சி எடுப்பதை கல்வித்துறை கட்டாயப்படுதவேண்டும்.
* கல்லூரியில் நிறுவங்கள் நடைமுறை தொழில்நுட்பம் வேல வாய்ப்புகளுக்கு ஏற்பட பாடத்திட்டங்கள் செயல்முறை திட்டங்களுடன் செயல்படுத்தவேண்டும்.
* மாணவர்கள் வாரம் ஒரு முறையாவது தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் கட்டுமான துறை மற்றும் தொழில்சாலைகளுக்கு சென்று கற்றுக்கொள்ளவேண்டும்.
* மாணவர்கள் பயிலும் கல்லூரிகளில் செயல்முறை கருத்தரங்கங்கள், தேசிய
மற்றும் உலகளாவிய கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.
* கல்லூரிகளில் உள்ள தொழில்நுட்ப கூடங்கள், இயதிரவியல் மற்றும்
உபகரணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அதன் உபயோகங்கள் பற்றியும் இயந்திரத்தை பற்றியும் விளக்கம் அளிக்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் காத்திருக்கும் வேலை வைப்புகள் !
மத்திய மாநில பொதுப்பணித்துறை,நீர்ப்பாசனத்துறை, மத்திய மாநில
நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், குடிசிமாற்று வாரியம்,
இந்திய ரயில்வே போன்ற துறைகளில் மாணவர்கள் படித்து முடித்தவுடன் உதவி பொறியாளர் பணிக்கு செல்லலாம். தனியார் துறையில் Leading construction company களில் பலதரப்பட்ட பதவிகளில் வேலை செய்யலாம்.
* Software துறைகளில் சிவில் மாணவர்கள் ப்ராஜெக்ட் மேனேஜர் மற்றும்
ப்ராஜெக்ட் பொறியாளர் பதவிகளில் வேலை செய்யலாம் .
* படித்து முடித்த உடன் தனியாக அலுவலகத்தை ஆரம்பித்து கட்டடங்கள் கட்ட வரும் பொதுமக்களுக்கு வரைபடங்கள் மதிப்பீடுகள் தயார் சைது கட்டுமான பணி போன்றவை சைது தரலாம்.
* அரசு ஒப்பந்தக்காரர்கள் பொறியாளர்களை நியமனம் செய்யவேண்டும் என்றநிபந்தனையின் படி வேலை செய்யலாம்.
*சிவில் பொறியாளர்களுக்கு அரசு ஒப்பந்தக்காரர் நியமனத்தில் முன்னுரிமை
தரப்படும், மற்றும் ஒப்பந்தக்காரர் பதிவு சைவத்ர்க்கான Solvency
certificate. EMD, security deposit ஆகியற்றில் கட்டண சலுகைகள் தரப்படும்.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவைகளில் Licensed சர்வேயர்
உரிமம் பெற்று வரைபடங்கள் மதிப்பீடுகள் தயார் சைது வரைபட அனுமதி
வாங்கித்தரலாம்
* அரசு உரிமம் பெற்று வங்கிகளில் வீடு கட்ட கடன் வாங்குபவர்களுக்கு
கட்டடங்கள் மதிப்பீடு சைது தரலாம் மற்றும் கட்டிட உறுதி சான்றிதள்
வாங்கித்தரலாம்.
* தனியார் கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்யலாம். வெளி நாடுகளில் பாலங்கள், சாலை அமைத்தல், உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கும் அமைப்பதற்கும் Investigation, Design, Execution ஆகியவற்றிற்கும் நமது சிவில் பொறியாளர்கள் அதிகமாக பணிபுரிகிறார்கள். பொதுவாக அடுத்த பத்து ஆண்டுகளில் நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் Infrastructure development மிக விரைவில் அமைய இருப்பதால் நல்ல தரமான சிவில்
பொறியாளர்கள் தேவைப்படுவதால் வேலை வாய்ப்புக்கள் மிக அதிகளவில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு முன்பும் ஒரு சிவில் பொறியாளர் கூட வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்ததாக சரித்திரம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சொந்த கால்களில் நிற்பதற்கான தைரியமும், வேலையில் எவ்வித பிரச்சினைகளை சமாளிக்ககூடிய வல்லமை பெற்றவர்களாக இருப்பதால் அவர்களதுஎதிர்காலம் என்றும் ஒளிமயமாக திகழ்கின்றது. கல்வி நிறுனங்கள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்!
* அருகாமையில் உள்ள கட்டுமான கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து project work, material testing, Field visit ஏற்பாடு செய்யவேண்டும்.
* சிவில் துறையில் முன்னோடியகளாக திகழும் சிறந்த வல்லுனர்களை கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.
* கல்லூரிகளில் preparation of estimates, project formulation, Investigation & Design execution of works, Testing & Consulting work சைவதன் மூலம் அரசு துறை ( National Highways, Highways & Rural works, PWD building construction & maintenance, Irrigation, TWAD board, Housing Board, Slump clearance ) உடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு மாணவர்களுக்கு செயல்முறை விளக்கங்கள் பற்றி புரிந்துகொள்ள வைக்கவேண்டும்.
* ஆராய்ச்சி துறைகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி அதில் மாணவர்கள் பங்கு
கொண்டு அதிலுள்ள நவீன தொழில் நுட்ப்பங்களை தெரிந்து கொள்ளவீண்டும்
கூடுதலாக பொறியியல் ஆராட்சி மையங்களை அமைக்கவேண்டும்.
* கல்லூரி நூலகத்தில் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களை ( Related to Civil
Engineering ) வைத்து மாணவர்கள் அதனை பயன்படுத்தி அறிவை
புதிப்பிக்கவேண்டும்.
* Manson Training Program கருத்தரங்கம் ஆகியவை நடத்துவதன் மூலம்
மாணவர்கள் அதில் பங்கு பெற்று பயன்பெறுவார்கள். அதுமட்டுமல்ல Consultant, Contractor, Field workers ஆகியோருடைய தொடர்புகளை வைத்துகொண்டு பின்னும் கட்டுமான தறையில் என்ன சாதிக்கமுடியும் என்பதை பற்றியும் மாணவர்களுக்கு பல்வேறு பட்ட வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுக்கவேண்டும்.
* மாணவர்கள் மூன்றாவது நான்காவது ஆண்டு படிக்கும் பொழுது பிற்காலத்தில் வேலைக்கு செல்வதற்க்கான அவர்களுடைய விருப்பங்களை தெரிந்துகொண்டு (, IAS, IPS, UPSE, Staff selection commission, Gate Examination) அதற்க்கு தகுந்தபடி கோச்சிங் கொடுக்கவீண்டும்.
* கல்லூரிகள் தொழில் சாலைகளுடன் தொடர்பு வைத்துகொண்டு அவர்களுடன் MOU sign சைது தொழில் சாலைகளுக்கு ஏற்ற மாதிரியான பொறியியல் வல்லுனர்கள் தேவை என அறிந்துகொண்டு அதற்க்கு தகுந்தபடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேடும்.
* மாணவர்கள் Creativity யை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை புதுவிதமான
ப்ரோஜெக்ட்களை செயற்ப்படுத்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள்
பொறுப்பு ஏற்று நல்ல ப்ராஜெக்ட்களை Patent சைவதர்க்கு ஏற்ப்பாடு
சைய்யவேண்டும்.
* Material testing center, Consultancy, Coaching center, Research center ஆகியவற்றை அமைத்து கொடுத்து அனைத்துக்கும் தரமான நிர்வாகிகள் நியமிக்க
வேண்டும். ஆக மொத்தத்தில் கல்லூரி நிர்வாகங்கள் தரமான சிவில்
பொறியாளர்களை உருவாக்குவதில் தங்கள் கடமைகளை உணர்ந்து நாட்டின்
வளர்ச்சிக்கு வித்திடவேண்டும்.
A.AMTRTHANATHAN
(Retd) Assistant Executive Engineer TWAD
Senior Civil Engineering Consultant PSN Group of Institutions
Govt , Registered Engineer – No, OM/G1/35256/2006
“SARO” 4th Cross, Timber Depot Road
Ranithottam, Nagercoil- 629001,
Phone -04652 220952, Cell-9944210307
E-Mail-amirthanathanarulappan3@gmail.com